சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட பட குழுவினர்கள்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

prince 2
prince 2

பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இவர் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது மேலும் தற்பொழுது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாகவும் தேதி மற்றும் நேரம் போன்றவற்றை பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

பிரின்ஸ் படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டாவது சிங்கிள் பாடலானது ஜெசிக்கா என்ற பாடல் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் பிரின்ஸ் படத்தில் தமன் இசையமைப்பில் உருவாகி உள்ளது. முதல் சிங்கிள் பாடல் போலவே இதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து மரியா, சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கோபுரா பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரின்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.