நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரையிலும் பேர்ஆவலுடன் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு வழியாக வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்து உள்ளது. ரசிகர்கள் தற்போது பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் ரசிகர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு உற்சாகத்தில் மிதக்க வைத்தது அஜித்தின் படக்குழு.
இப்படி அடுத்தடுத்த செய்திகளை வெளியிட்டு இருந்த கொண்டு இருந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக வலிமை படக்குழு ரஷ்யா பறந்தது. தல அஜித்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ரஷ்யாவில் அவர்களை வரவேற்ற விதமும் வழியனுப்ப விதமும் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. வலிமை படத்தின் அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு ஒரு வழியாக முடிந்தது.
தற்போது இந்த படத்தின் இரண்டாவது கட்ட பாடல் அல்லது வலிமை படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏதேனும் ஒன்று வெளியாக வேண்டும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் வலிமை படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது அதில் அஜித் டோர்ன் ஓட்டுவது போல் இருக்கும் புகைப்படம் கசிந்துள்ளது.
அஜித் சினிமாவையும் தாண்டி மற்றவன்றில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் என்பதை பார்த்திருக்கிறோம் ஆனால் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு அடுத்த கணமே இவ்வாறு செய்தது தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏனென்றால் சூட்டிங் முடிந்த பிறகு ஒரு நடிகர் ரெஸ்ட் எடுப்பார்கள் ஆனால் அதிலிருந்து மாறுபட்ட வராக இருக்கிறார் அஜித். தன்னால் முடியும் எதையும் சாதிக்க முடியும் என இருக்கும் பிரபலங்கள் தான் அடுத்த கட்டத்தை நோக்கி ஓடுவார்கள் அந்த வகையில் அஜித்துக்கு ஈடு இணை எவருமில்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.