தளபதி விஜய் அடுத்ததாக தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தற்பொழுது தளபதி 67 படத்தின் அறிவிப்பு தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி வருகிறது எனவே இணையதளங்களில் இந்த படத்தை பற்றி தான் பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் தொடங்க இருக்கிறது எனவே தளபதி 67 படத்தின் காஷ்மீருக்கு புறப்பட்டு உள்ளது.
தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது மேலும் இவர்களை அடுத்து சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்களும் நடிக்க இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 60 நாட்களில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதற்காக திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் காஷ்மீர் செல்ல ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக திரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. எனவே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்து வருகிறார்கள் அதாவது திரிஷா கருப்பு நிற மாஸ்க் மற்றும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு யாருக்கும் அடையாளம் தெரியாத அளவிற்கு ஏர்போர்ட்டில் நடந்து வருகின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
சில காலங்களாக த்ரிஷாவிற்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இவருடைய மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. எனவே இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் விஜய் மற்றும் திரிஷா இவர்களுடைய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு முன்பு அவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் தளபதி 67 திரைப்படம் நல்ல வெற்றினை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தளபதி 67 திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறும் என கூறியிருந்தார் எனவே தளபதி திரிஷா இவர்களுடைய ரொமான்ஸை நீண்ட வருடங்கள் கழித்து ரசிகர்கள் பார்க்க மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.