தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் பாவனை முகம் என அனைத்தையும் மாற்றிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது விக்ரம்தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சினிமா துறையில் மிகவும் சிறந்து விளங்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது ஏனெனில் அந்த இயக்குனர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் டிமான்டி காலனி இமைக்காநொடிகள் போன்ற வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படத்தை சினிமாவில் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் இயக்கும் திரைப்படமும் மிகவும் வித்தியாசமாகவும் சஸ்பென்ஸ் மற்றும் சைக்காலஜிக்கல் நிறைந்த த்ரில்லர் திரைப்படமாக தான் அமையும் என தெரியவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியா ஸ்ரீநிதி ஷெட்டி கேஎஸ் ரவிக்குமார் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் போன்ற பெரிய ரசிகர் பட்டாளமே இந்த திரைப்படத்தில் ஒன்றுகூடி நடிக்க உள்ளார்கள்
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விக்ரம் வேறு கெட்டப்பில் நடிப்பதன் காரணமாக திரை படத்தின் கிராபிக்ஸ் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளதாகவும் படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர்கள் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த வீடியோ மிகவும் பிரம்மாண்டமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.