‘தளபதி 67’ திரைப்படம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட பட குழுவினர்.! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்..

aditi sangar 1
aditi sangar 1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவருடைய ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த திரைப்படத்திற்கான தளபதி 67 திரைப்படத்தின் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது இதன் காரணமாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா,திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரித்திவிராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் கூட்டணியில் உருவாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் 7 பாடல்களுக்கு இசையமைக்கிறார் மேலும் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் தயாரிக்க இருப்பதாகவும் இயக்குனர் ரத்னா குமார் இந்த படத்தின் திரைக்கதை அமைக்க பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்தினகுமார் ஆகிய இருவரும் இணைந்து செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ரத்னகுமார்.

அதில் ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆறு ஏழு என்ற எண்களுக்கு பதிலாக பட்டாசு வெடிக்கும் எமோஜி பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக மறைமுகமாக ரத்னகுமார் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் இவ்வாறு இவர்களுடைய பதிவு ரசிகர்கள் மத்தியில் வருகிறது. மேலும் தொடர்ந்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.