இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி அதிதி சங்கர் நடிக்கும் விருமன் திரைப்படம் இந்த மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண்,சரண்யா பொன்வன்னன் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
முதலில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாடலாசிரியரை மதிக்கவில்லை என்று கவிஞர் சினேகன் கூறி இருக்கிறார். பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் மேடையில் இருந்த அனைவரையும் பற்றி பேசியிருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு பாடலாசிரியரையும் அவர் புகழ்ந்து பேசி இருக்கிறார்.
அப்போது கவிஞர் சினேகன் ஒரு திரைப்படத்திற்காக உழைக்கும் அனைத்து பிரபலங்களையும் அழைத்து அனைவருக்கும் ஒரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஏனென்றால் அவர்கள் எல்லாம் சினிமா தான் எல்லாம் என்று நினைக்கிறார்கள் அதற்காகவாவது அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
மேலும் சினேகன் அவர்கள் சமீபத்தில் நடந்த விருமன் இசை வெளியீட்டு விழாவை பற்றியும் பேசியிருக்கிறார். அப்போது அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு விருமன் படத்தின் பாடல் ஆசிரியருக்கு கூட தெரிவிக்காமல் இசை வெளியீட்டு விழா நடத்தினார்கள் என்று அந்த மேடையில் கூறினார்.
இது போன்ற காரியங்களை இனிமேல் செய்ய வேண்டாம் எனவும் அவர் கூறியிருக்கிறார் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஒவ்வொரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அந்தப் பாடல் ஆசிரியர் விருமன் படத்தில் உள்ள பாடல்களை எவ்வளவு நேர்த்தியான முறையில் கையாண்டு இருக்கிறார் அதற்காவது அவருக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கலாம் என்று அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாடல் ஆசிரியரை கூப்பிடவில்லை எனவும் மேடையில் கூறியுள்ளார்.