மாதவன் இயக்கி நடித்துள்ள “ராக்கெட்ரி” படத்தின் ரீலிஸ் தேதியை லாக் செய்த படக்குழு.! எப்போ வர போகுது தெரியுமா.?

rocketry
rocketry

90 காலகட்டங்களில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் தான் நடிகர் மாதவன் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக உருமாறினார் அது அவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் மாதவன் ஆக்ஷன் திரைப்படங்களில் இறங்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு சினிமா உலகில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடிக்க தயாராக இருந்தாலும் மாதவனுக்கு செய்துகொள்ள முடிவு வாய்ப்புகள் வழங்கப்படாமல் போனதால் அவர் தமிழை தாண்டி ஹிந்தி பக்கம் அடி எடுத்து வைத்தார் அங்கு உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து கெஸ்ட் ரோல் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

இருபின்னும் அவரால் தனக்கென ஒரு இடத்தை எந்த ஒரு மொழியிலும் பிடிக்க முடியாமல் போனது. பல வருடங்கள் கழித்து மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதி சுற்று என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார். ஹீரோ என்ற அந்தஸ்து மட்டும் மீண்டும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை .

இப்படி இருந்த நிலையில் நடிகர் மாதவனே ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். டீசர் கூட அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தில் கவுரவ வேடத்தில் ஷாருக்கான் மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கின்றன.

படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது இதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இதுவரை இருந்து வந்துள்ளது.