சிம்புவின் “பத்து தல” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.! அடுத்த 100 கோடியை எடுத்து வையுங்க.. சந்தோஷத்தில் ரசிகர்கள்.!

simbu-
simbu-

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இடையில் சிம்பு உடல் எடை சற்று கூடி சில படங்களில் நடித்ததால் அந்த படங்கள் சரிவை சந்தித்தன.

பின்பு உடல் எடையை பிட்டாக மாற்றிக் கொண்டு ஈஸ்வரன் மாநாடு போன்ற படங்களில் காம்பேக் கொடுத்து வெற்றி படங்களாக மாற்றினார். மேலும் சிம்பு கெரியரில் மாநாடு படம் புதிய திருப்பு முனை படமாக அமைந்து நல்ல வசுலை ஈட்டி தந்தது. இதைத் தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது சிம்பு அவரது தந்தையின் உடல்நிலை காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் சிம்பு நடித்து வந்த மற்றொரு படம் குறித்தும் ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வந்த பத்து தல படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர் இந்த படம் உலகம் முழுவதும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அதற்கு முன்பாகவே..

சிம்பு, நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து நடித்த மஹா திரைப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக கூடுதல் தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. இப்படி அடுத்தடுத்து சிம்புவின் மூன்று படங்கள் வெளியாகயுள்ள நிலையில் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்