சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுது கூட தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் ரஜினி இந்த திரைப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், விநாயகர், வசந்த் ரவி, யோகி பாபு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அண்மையில் கூட இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இதுவரையிலும் பார்க்காத ஒரு ரஜினியை இந்த திரைப்படத்தில் பார்ப்பீர்கள் என கூறியுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஜெயலலிதா திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு..
அடுத்ததாக அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களில் ரஜினி நடிக்க இருக்கிறார் அதில் முதலாவதாக லால் சலாம் என்ற திரைப்படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் ரஜினி நடிக்கிறார் இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மற்றொரு படமும் பண்ண இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படத்திலிருந்து ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது அதாவது ரஜினியின் ஜெயிலர் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இதனால் படக்குழு தற்பொழுது ஷூட்டிங்கில் அதிகம் தீவிரம் காட்டி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது