தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை நடிகராக வலம் வருபவர் சிபி சத்யராஜ் இவர் நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த நிலையில் சிபி சத்யராஜ் நடித்த திரைப்படம் நீண்ட காலமாக வெளியாகாமல் கிடப்பில் இருந்து வந்தது இந்த நிலையில் தற்போது திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளார்கள் படக்குழு.
சிபி சத்யராஜ் மற்றும் நிகிலா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு உருவாக்கிய திரைப்படம் தான் ரங்கா இந்த திரை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீசாகாமல் இருந்துவருகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற மே 13ஆம் தேதி ரிலீஸாகும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது மே 13ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டுமென சிபி சத்யராஜ் தன்னுடைய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வினோத் இயக்கத்தில் செல்லையா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ராம் ஜீவன் ராமன் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி சிபி சத்யராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
மேலும் ரேஞ்சர், வட்டம் ஆகிய திரைப்படங்களில் சிபி சத்யராஜ் நடித்து வருகிறார் இந்த திரைப்படமும் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.