தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட ரசிகர்கள் அந்த படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் தான் வாரிசு தற்போது வரையிலும் திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் பல வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மேலும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த நிலையில் சரத்குமார், ஷாம் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வரும் வாரிசு திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
அதாவது அமேசான் பிரைமில் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து விஜய் நடிப்பில் இவருடைய 67 திரைப்படம் உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருக்கும் நிலையில் மேலும் ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இருக்கின்றனர் இந்த படத்தின் பூஜை நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களும் வெளியானது இந்நிலையில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்க இருக்கிறது.