நடிப்புக்கு பெயர்போன விக்ரம் அண்மைக்காலமாக வெற்றி படங்களை கொடுக்க தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு எந்த படமும் ருசிக்கவில்லை இருந்தாலும் விக்ரம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இருப்பினும் எந்த ஒரு படமும் வெளியாகமல் இருந்தது அவருக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது ஒரு கட்டத்தில் அனைத்து கிடப்பில் கிடந்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு ஒரு வழியாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
திடீரென போன் நடிகர் விக்ரமுக்கு வந்தது. அதாவது கோப்ரா படத்தின் டப்பிங் பணிகளை முடிக்குமாறு கூப்பிட்டனர். உடனே வந்து விக்ரம் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ஒருவழியாக படக்குழு ஒரு நல்ல செய்தியையும் சொல்லியது.
அதாவது ஆகஸ்ட் 11 ஆம் தேதி படம் ரிலீசாகும் என கூறி உள்ளது. இதனால் நடிகர் விக்ரம் தற்போது பெருமூச்சு விட்டுள்ளார் இந்த படம் ஹிட் அடிக்கும் போது அதில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என நினைத்து உள்ளார்.
இந்த படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.