விருதுகளை அள்ளிய “சூரரை போற்று” – கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர்.! வைரல் புகைப்படம் இதோ.!

surarai-pottru
surarai-pottru

நடிகர் சூர்யா தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் அனைத்தும் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படங்களாக இருந்தது.

அதே சமயம் இந்த படங்கள் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அசத்தியது அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வணங்கான் வாடி வாசல் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார் இது இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யாவை சந்தோஷப்பட வைத்துள்ளது சூரரை போற்று படம்.

நேற்று 68 வது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்றது இதில் தமிழக திரைப்படங்கள் சில விருதுகளை அள்ளி அசத்தியது அதில் ஒன்றாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரறை போற்று திரைப்படம் சுமார் ஐந்து விருதுகளை கைப்பற்றியது.

சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது,  சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை சிறந்த படத்திற்கான  விருது என ஐந்து விருதுகளை அள்ளி அசத்தியது. சூறரை போற்று பட குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது மேலும் சூர்யாவும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சூரரை போற்று படக்குழு இந்த செய்தியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

அதன் புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூரரைப்போற்று படக்குழு டீமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் சூரரை போற்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய அந்த புகைப்படத்தை..