தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டிய நடிகர் சிம்பு தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நடிகர் சமீபத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின் மூலம் காலம் கழித்து சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
அந்த வகையில் இந்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் சிம்பு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்டார்.
நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையைக் குறைத்தது வியக்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படம் நடிகர் சிம்புவுக்கு 47வது திரைப்படமாக அமைந்துள்ளது. முதலில் இந்த திரைப்படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என பெயர் வைக்கப்பட்ட நிலையில் பின்னர் மாற்றம் செய்து வெந்து தணிந்தது காடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவிய. அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை கயடு லோகர் என்பவர் நடித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நமது நடிகை சமீபத்தில் பிகினி உடை அணிந்து கொண்டு பீச்சில் அந்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.