ஆரம்பமே சண்டை தான்.? விடாமுயற்சி படம் குறித்து வெளிவந்த மாஸ் அப்டேட்

ajith-
ajith-

துணிவு திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும்  திரைப்படம் தான் விடாமுயற்சி இந்த படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்ச அளவில் லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி மிரட்டலாக எடுக்க உள்ளார். முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் எடுக்க வேண்டியதாக இருந்தது .

ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாவது பாதியை அந்த அளவுக்கு திருப்திகரமாக இல்லாததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியிடம் தஞ்சமடைந்தது. படத்திற்கு விடாமுயற்சி என பெயர்  அறிவிக்கப்பட்டாலும் அடுத்த கட்ட அப்டேட் படக்குழு சொல்லாமல் இருப்பதால் அஜித்தின் விடமுயற்சி படம் டிராப்பானதாக பலரும் சமூக வலைதள பக்கத்தில் சொல்லி வந்தனர்.

ஆனால் சினிமா பிரபலம் மற்றும் பத்திரிகையாளர்கள் அப்படியெல்லாம் கிடையாது அஜித் சரியான நேரத்திற்காக வந்து கொண்டிருக்கிறார் நிச்சயம் விடாமுயற்சி படம் எடுக்கப்படும் என கூறினார்கள் அதன்படி அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என தெரிய வருகிறது.

அதற்குள் அஜித்தும் சென்னை வந்து விடுவார் என தகவல்கள் தெரிவித்து நிலையில் விடாமுயற்சி படம் குறித்துசில தகவல்களும் நமக்கு கிடைத்துள்ளது அதாவது.. விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட பிளான் செய்துள்ளார் மகிழ்திருமேனி அஜித் நடிக்க உள்ள இந்த சண்டை காட்சிகள் ரொம்பவே பிரமாண்டமாக உருவாக இருப்பதால் இதற்காக சென்னையிலேயே செட் போடப்பட்டு ஷூட்டிங் செல்ல ரெடியாகிவிட்டார் இயக்குனர்.

முதலில் சண்டை காட்சிகளை முடித்து விட்டால் அடுத்த அடுத்த காட்சிகளை வேகமாக எடுக்க  பொருள் திறமையை திட்டமிட்டு இருக்கிறாராம்.. மேலும்  விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது ஒன்று இளமையான லுக், வயதான சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை..