தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஏராளமான சுவாரசியமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் புதிய சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு சில சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2 இந்த சீரியலில் ஜீவா காவியா இருவரும் காதலித்து வரும் நிலையில் எதிர்பாராத விதமாக ஜீவாவின் அண்ணன் பார்த்திபன் மற்றும் காவியாவுக்கும், காவியாவின் அக்கா பிரியா மற்றும் ஜீவாவுக்கும் மாறி மாறி திருமணம் நடைபெற்று விடும்.
இதனை ஜீவா மற்றும் காவியாவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொள்வார்கள் காவியாவும் பார்த்திபனை ஏற்றுக்கொண்ட நிலையில் பார்த்திபனின் அம்மாவால் தற்போது இவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு விவாகரத்தும் நடைபெற்று உள்ளது.
இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிகைகளுக்கிடையே ரசிகர்களால் மன கஷ்டம் ஏற்பட்டுள்ளது அதாவது இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தில் கேப்ரில்லாவும், பிரியா கதாபாத்திரத்தில் சுவாதி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு என தனித்தனியாக ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இவர்களை கொண்டாடி வருகின்றனர்.
இவ்வாறு காவியா பிரியா இவர்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் தான் கிருபா இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் செட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் மேலும் இவர் தனியாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் நிலையில் அங்கு நடக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அப்படி காவியா, பிரியா இவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இருதரப்பு ரசிகர்களும் மிகவும் மோசமாக சண்டை போட்டு வருகிறார்கள். ஒரு சிலர் மிகவும் தரக்குறைவாக பேசி வரும் நிலையில் இவ்வாறு மீண்டும் செய்தால் நான் எந்த வீடியோ மற்றும் புகைப்படத்தையும் விடமாட்டேன் தயவுசெய்து இதை என்னுடைய யூடியூப் பேஜில் வைத்துக் கொள்ளாதீர்கள் என மிகவும் கடுப்பாகி பேசியுள்ளார்.