தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தவர் நடிகர் சிம்பு ஆரம்பத்தில் சிறப்பான ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி மற்றவற்றிலும் தனது திறமையை காட்ட தொடங்கினார்.
அந்த வகையில் நடன கலைஞராகவும், இயக்குனராகவும், பாடகராகவும் சினிமா உலகில் பயணிக்கின்றனார் இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக சிம்பு விஸ்வரூபம் எடுத்தார் இப்படி சினிமா உலகில் அதிக திறமை காட்டி இருந்தாலும் சமீப காலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் இவர் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக இருந்தன. மேலும் பிரச்சினைகளையும் சிம்பு சந்தித்து வந்ததால் அவரால் தொடர்ந்து கம்பக் கொடுக்க முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக வந்தார் வந்தவுடனேயே தொடர்ந்து சிறந்த இயக்குனர்களுடன் கதையை கேட்டு அடுத்தடுத்த படத்தில் ஒப்பந்தமானார் ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு உடன் கை கோர்த்தது மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் அவரது கேரியரில் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருந்தாலும் இந்த படத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார்.
மாநாடு படத்தில் இதுவரை சிம்பு நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு முற்றிலுமாக மாறுபட்டு படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அசத்தி இருந்தார் மேலும் எஸ் ஜே சூர்யா மற்ற பிரபலங்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் தற்போது இந்த திரைப்படம் நல்ல வசூல் வேட்டை கண்டு வருகிறது. விமர்சன ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளதால் மக்கள் கூட்டம் திரையரங்கை நாடியே வருகின்றனர் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் அள்ளி வெற்றி நடை கண்டு வருகிறது.
மாநாடு திரைப்படத்தை ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது அந்த வகையில் தற்போது கூட சூரரை போற்று என்ற பிரமாண்ட படத்தை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்த பெண் இயக்குனர் சுதா கொங்கரா. அண்மையில் மாநாடு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிம்புவை நேரில் கட்டியணைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.