சின்னத்திரையில் மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் விஜய் டிவி சற்று வித்தியாசமாக காமெடிக்கு என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன அந்த வகையில் காமெடிக்கு என்று பெயர் போன கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம்.
இப்படி பல காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்த விஜய் டிவி சற்று வித்தியாசமாக சமையல் நிகழ்ச்சியிலும் காமெடியை கலந்து குக் வித் கோமாளி என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சமையல் தெரிந்த பிரபலங்களுடன் kpy பிரபலங்களை இறக்கி காமெடியாக நடத்தி வருகின்றன.
இந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தற்போது 3வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தொடங்கிய நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இதில் நடுவராக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்து வருகின்ற நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார் மேலும் இதில் கோமாளியாக கடந்த மூன்று சீசன்கள்களிலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை போன்ற பலரும் என்டர்டைன்மென்ட் செய்து வருகின்ற நிலையில் கடந்த எபிசோடில் இம்யூனிட்டி டாஸ்க் நடைபெற்றது.
அப்போது இம்யூனிட்டி டாஸ்க் இல் வெல்பவர் இந்த நிகழ்ச்சியின் டாப் 5 இல் இடம் பெறுவார் என அறிவித்து அதனடிப்படையில் கடந்த எபிசோடில் சிறப்பாக சமையல் செய்து டாப் 5 இல் ஸ்ருதிகா இடம்பிடித்து முதல் பைனல் லிஸ்ட் ஆகியுள்ளார் இதை நடுவர்கள் அறிவித்ததும் ஸ்ருதிகா முதலில் ஆச்சரியப்பட்டு பின்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்