சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இளமை இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் நெல்சன் இதற்கு முன் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் கடைசியாக விஜய்யை வைத்து இவர் எடுத்த பீஸ்ட் திரைப்படம் மட்டும் சுமாரான வரவேற்பு பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் மிக சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, தமன்னா போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் தான் தொடங்கப்பட்டு ஜெயில் போன்ற செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் ஷுட்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து லீக் ஆகிய வண்ணமே இருக்கின்றன. அதனால் படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் முழிபிதுங்கி வருகின்றன.
இதனால் மற்ற படங்களை இயக்கி வரும் இயக்குனரோ தயாரிப்பார்களோ பல கட்டுப்பாடுகளுடன் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இனி யாரும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டளை விதித்துள்ளாராம். மேலும் சூட்டிங் ஸ்பாட் இருக்கு யாராவது மிக முக்கியமானவர்கள் வந்தால் கூட மொபைல் போன் பின்னாடி ஒரு மறைப்பு ஸ்டிக்கர் ஒட்டி விடுகின்றனர்.
இதனால் மொபைல் போன் கேமரா கவர் செய்யப்படும் இப்படி ஷூட்டிங் ஆரம்பத்திலேயே இயக்குனர் நெல்சன் சிறப்பாக யோசனை செய்து நல்ல ஐடியா கொடுத்துள்ளார். ஆனால் இந்த ஐடியா வாரிசு பட குழுவிற்கு தோணவில்லை என பலரும் கமென்ட் செய்து வருகின்றன.