மாஸாக இருக்கும் தல அஜித்துடன் வீடியோ எடுத்த ரசிகர்.! அதுவும் எந்த உடையில் இருக்கிறார் பார்த்தீங்களா.!

ajith

அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் வெளிவந்தால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் படக்குழு ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து இயக்கி வந்தார்கள். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தல அஜித் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும் வலிமை திரைப்படம் ரசிகர்களை மிகவும் எதிர்பார்க்க வைக்கிறது.வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை நாம் பார்த்திருப்போம்.

அதனைத் தொடர்ந்து வலிமை திரைப்படத்திலிருந்து நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி யூடியூபில் தற்போது வரை அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.மேலும் தற்போது ரஷ்யாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது இதனைத்தொடர்ந்து தல அஜித் அங்கேயே தனது பைக் பயணத்திற்காக தங்கி உள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்தபோது தல அஜித்துடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து ரசிகர்கள் வெளியிட்டு வந்தார்கள் என்பதை நாம் பார்த்திருப்போம் அதே போல் தற்போதும் தல அஜித்துடன் ஒரு ரசிகர் செல்பி வீடியோ எடுத்துள்ள வீடியோ காணொளி வெளியாகியுள்ளது.

ஆம் தல அஜித் பார்ப்பதற்கு மிகவும் மாசாக  இந்த வீடியோவில் இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் தல அஜித் பார்ப்பதற்கு மிகவும் மாசாக தெரிகிறார் அதிலும் குறிப்பாக இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது தான் இந்த ரசிகர் அவருடன் வீடியோ எடுத்திருக்க முடியும் எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.