நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ரசிகை..! வீடியோவை வெளியிட்டு பெருமிதம் கொண்ட சிவகார்த்திகேயன்..!

sivakarthikeyan-3
sivakarthikeyan-3

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்ததன் பின்னர் தன்னுடைய சிறந்த திறனை வெளிக்காட்டி படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சினிமாவில் நுழையும்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் தான் முதலில் நடித்திருந்தார்.

அதன் பிறகுதான் இவர் கதாநாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றார் அந்த வகையில் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வளர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறுவயதில் இருந்து வயதானவர் வரை ரசிகர்கள் உள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் எடுக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் இருப்பது மட்டுமில்லாமல்  குடும்பம் கலந்த விஷயங்களும் இந்த திரைப்படத்தில் அதிகம் இடம்பெற்றிருக்கும்.

பொதுவாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு பிரபலம் ஆனார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய பேச்சு திறமை தான். அந்த வகையில் தன்னுடைய வெறித்தனமான பேச்சின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது சிவகார்த்திகேயன் சிறுவயது ரசிகர்களை பெருமளவிற்கு கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகை ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது ஒரு சின்ன குழந்தை தான்.

இந்நிலையில் இவ்வாறு வெளிவந்த இந்த வீடியோவானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் பல ஆயிரம் லைக்குகளையும் கமெண்ட் களையும் குவிந்த வண்ணமே இருக்கிறது.