கால் நடக்க முடியாத நிலையிலும் மாநாடு படத்தை திரையில் பார்க்க ஆவலுடன் வந்த ரசிகன்..!

simbu-02
simbu-02

தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு பிரச்சனைகளை கடந்து இளம் கதாநாயகனாக ஜொலித்து வருபவர்தான் நடிகர் சிம்பு.  இவர் திரை உலகில் பட்ட கஷ்டத்திற்கு அளவே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு தன்னுடைய அலட்சியத்தால் தமிழ் சினிமாவில் பின் தள்ளப்பட்டார்.

அந்த வகையில் சரியான பட வாய்ப்பு இல்லாமல் வெகுநாளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நடிகர் சிம்பு கிடைத்த நேரத்தை மிக சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் 30 நாளில் நடித்து சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது  பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்து ரிலீஸ் தேதியை அறிவித்த நிலையில் அதுவும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக நடிகர் சிம்பு ஆரம்பத்தில் பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களை நடித்தது மட்டுமல்லாமல் பல்வேறு காதல் திரைப்படத்திலும் நடித்து ஏகப்பட்ட இளைஞர்களையும்  பெண் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். பின்னர் அவர்களுடைய துரதிஷ்டவசமாக எந்த ஒரு திரைப்படத்திலும் நல்ல கதாபாத்திரம் கிடைக்காததால் பின்தள்ளப்பட்டார்.

இந்நிலையில் வெகுகாலமாக மௌனம் காத்து வந்த நடிகர் சிம்பு சமீபத்தில் மாநாடு திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய மொத்த ரசிகர் கூட்டத்தையும் மறுபடியும் ஒன்று சேர்த்துள்ளார்.  அந்த வகையில் ஆங்காங்கே உள்ள பல்வேறு சிம்பு ரசிகர்களும் இன்று வெளியான மாநாடு திரைப்படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்து உள்ளார்கள்.

இந்நிலையில் வெகு நாள் கழித்து சிம்பு திரைப்படத்திற்கு இப்படி ஒரு கூட்டத்தை பார்த்த பல்வேறு தியேட்டர் நிர்வாகிகளும் அசந்து போய் விட்டார்கள்.  மேலும் மாநாடு திரைப்படத்தை பார்ப்பதற்காக கால் நடக்க முடியாத ஒரு ரசிகர் முதல் ஷோ பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்தது மிகவும் ஆச்சரியம் ஓட்டும் செயலாக இருந்தது.