பிரமாண்ட தொகை கொடுத்து வலிமை திரைப்படத்தை தட்டிதூக்க நினைத்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.? கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது காரணம் இவர் தான்.

ajith

தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த உள்ள நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தல அஜித் இவர் தற்போது ஹச் . வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்களது கூட்டணியில் இதற்கு முன்பு நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் ஒன்று சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த கூட்டணியில் வலிமை படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்தின்   எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறார் போனிகபூர். இப்படத்தின் ஷூட்டிங் 60% முடிவடைந்த நிலையில் மீதி படபிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தியேட்டர்கள் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதால் OTT நிறுவனகள்கள் இதனை இந்த நிலையை சரியாக பயன்படுத்தி புது படங்களை கைப்பற்றி OTT தளத்தில் வெளியிட தற்போது முயற்சித்து வருகின்றன.

இப்பொழுது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்த ஓட்டி நிறுவனம் என்றால் அது அமேசான் நிறுவனம் தான். இந்த நிறுவனம் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை கைப்பற்றி வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் வருகின்ற புது படங்களை  வெளியிட தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது அந்தவகையில் மாஸ்டர் சூரரைப்போற்று படங்களுக்கு மிகப்பெரிய தொகை பேசப்பட்டு  இருந்தன. இது ஒரு பக்கம் இருந்தால் கூட தற்போது அஜித் நடித்துக்கொண்டிருக்கும் வலிமை படம் 60% முடிவடைந்த நிலையில் வலிமை படத்தை மிகப் பெரிய விலைக்கு கேட்டது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ajith and kapoor
ajith and kapoor

ஆனால் தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள் படம் முழுக்க முழுக்க தியேட்டரில்தான் ரிலீசாகும் இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்டது என தெள்ளத்தெளிவாக கூறினார். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.