அஜித் நடித்த திரைப்படத்தில் ஒரு படத்தைக் கூட வாங்காத பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!! அதிர்ச்சித் தகவல்…

ajith
ajith

thala ajith news: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இதற்கு முன் அஜித் பல திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

பாக்ஸ் ஆபீசிலும் பல சாதனைகளை படைத்துள்ளது அஜித் திரைப்படம், அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா, வேதாளம், நேர்கொண்டபார்வை, விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் பண்டிகை நாட்களில் புதிய திரைப்படத்தை ஒளிபரப்பி டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பார்கள், அந்தவகையில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் புது புது திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள் அதிலும் ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அஜித்தின் திரைப்படத்தை ஒளிபரப்பி டி ஆர் பி யில் அதிக ரேட்டிங் பெறுவார்கள்.

ஏனென்றால் அஜித் திரைப்படத்தை ஒளிபரப்பினால் அந்த தொலைக்காட்சியின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும், அதனால் அஜித் திரைப்படம் வெளிவருகிறது என்றால் அதன் சாட்டிலைட் உரிமையை கைப்பற்ற பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் அஜித்தின் திரைப்படத்தை வாங்குவதற்கு பணத்தை வாரி இறைப்பார்கள், ஆனால் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மட்டும்தான் அஜித் நடித்த 59 திரைப்படங்களில் ஒரு திரைப்படத்தை கூட காசு கொடுத்து வாங்காமல் இருந்து வருகிறார்கள்.

அது வேற எந்த தொலைக்காட்சி நிறுவனமும் கிடையாது விஜய் தொலைக்காட்சி தான் இதுவரை அஜித்தின் திரைப்படத்தை ஒளிபரப்பாமல் இருந்து வருகிறார்கள், அவர்களுக்கு அஜித்தின் திரைப்படம் கிடைக்கவில்லையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கிறது.