நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்து சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்து தல மற்றும் கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் அவரது ஒவ்வொரு படமும் வெற்றி பெறும் போது நடிகர் சிம்பு கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறார் இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே அச்சத்தில் இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் கேஜிஎப் படத்தை தயாரித்து வெற்றி கண்ட ஹோம்பலே பிலிம்ஸ்..
தற்பொழுது மீண்டும் பிரசாந்த் நீலுடன் கைகோர்த்து சலார் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. ஏன் இப்பொழுது திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வரும் கந்தாரா திரைப்படத்தையும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெற்றி கண்டது.
இந்த நிறுவனம் அடுத்ததாக சுதா கொங்கரா மற்றும் சிம்புவுடன் கைக்கோர்த்து புதிய படத்தை தயாரிக்க இருக்கிறது இந்த படத்தில் நடிக்க சிம்பு அதிக தொகை கேட்டு இருக்கிறார் அதற்கும் அந்த தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லிவிட்டதாம். ஆனால் இதை கேள்விப்பட்ட இயக்குனர் சுதா கொங்கரா சிம்பு சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டிற்கு எவ்வளவோ அதற்கு ஏற்றபடி நடிகர் நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்பதை இயக்குனருக்கு நன்றாகவே தெரியும். அதன்படி சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்திற்கு சிம்பு சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என முட்டுக்கட்டை போட்டு உள்ளார் இதனால் தயாரிப்பு நிறுவனம் சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்..