தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் உலக நாயகன் கமலஹாசன் இவர் திரை உலகில் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது போடாத கெட்டப்பே கிடையாது அந்த அளவிற்கு பல படங்களில் நடித்து நம்மை மகிழ்வித்துள்ளார். இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் 1995 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான அவ்வை சண்முகி திரைப்படம். அப்பொழுது வெளிவந்து சக்கபோடு போட்டது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என கலந்த அற்புதமான படமாக இருந்தது படத்தில் கமலுடன் சேர்ந்து மீனா, மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த திரைப்படத்திற்கு நடிக்க சுமார் 1.50 கோடி அப்பொழுது சம்பளம் கேட்டாராம் இந்த சம்பளம் அப்பொழுது மிகப்பெரிய தொகையாம்..
ஆனால் தயாரிப்பாளர் அவ்வளவு எல்லாம் தர முடியாது எனக் கூறி மறுத்திருக்கிறார். உடனே சுதாகரித்துக் கொண்ட உலகநாயகன் நான்கு ஏரியாக்களில் வெளியிடும் உரிமையை தனக்கு தர வேண்டும் என கேட்டு இருக்கிறார் அதற்கு தயாரிப்பாளர் காசுக்கு பதில் இதை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார். படம் வெளிவந்து மக்களின் அமோக வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தின் மூலம் கமலஹாசனுக்கு சுமார் 5 கோடிக்கு மேல் லாபம் கிடைத்ததாம். அவ்வைசண்முகி படத்திற்காக அவர் கேட்டது ஒன்றரை கோடி ஆனால் நான்கு ஏரியாக்களில் வெளியிட்டதால் அவருக்கு 5 கோடிக்கு மேல் கிடைத்ததாம் பின் நாட்களில் இதை இதை நினைத்து தயாரிப்பாளர் ரொம்ப வருத்தப்பட்டாராம்.