தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் மிக பிரபலமான நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வளம் வந்தவர்தான் நடிகர் சிம்பு இவர் விண்ணை தாண்டி வருவாயா என்ற திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு ஹிட்டானா திரைப்படத்தையும் கொடுக்கவில்லை.
அந்த வகையில் இவை அனைத்திற்கும் பதில் சொல்லும் வகையாக நடிகர் சிம்பு வெகு நாள் கழித்து வெளிவந்த திரைப்படம் தான் ஈஸ்வரன். இத்திரைப்படமும் சரியான வெற்றியை கொடுக்கவில்லை. அந்த வகையில் இவை அனைத்தையும் ஈடுகட்டும் வகையில் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் தான் மாநாடு.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் மேலும் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது.
போகிற போக்கை பார்த்தால் நடிகர் சிம்பு நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து மிக விரைவில் முன்னணி நடிகர் இடத்தை பிடித்து விடுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஒருவர் வெற்றி அடைந்தால் அவருடன் ஒற்றி கொள்வதும் தோல்வி அடைந்தால் அவரை விட்டு விலகி செல்வது வழக்கம் தான்.
அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தோல்வி திரைப்படங்களை கொடுத்த பொழுது அவருக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்தது மட்டுமில்லாமல் அவதூறாக பேசிய அந்த தயாரிப்பாளர் சமீபத்தில் நடிகர் சிம்புவிடம் தம்பி நமக்கு ஒரு கால்சீட் கொடுங்கள் என வெட்கமின்றி கேட்டுள்ளாராம்.
இவ்வாறு அந்த தயாரிப்பாளர் கேட்டதை நினைத்து சிம்பு இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறாராம்.