மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுக்கப்போகும் பிரபல தயாரிப்பாளர்.? கதாநாயகனாக களமிறங்கும் மாஸ் நடிகர்.

mgr

தமிழ் திரையுலகில் பல இயக்குனர்களும் தங்களுக்கு பிடித்தமாதிரி பல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் ஆனால் பல இயக்குனர்கள் தற்பொழுது வரலாற்று திரைப்படங்களை எடுப்பதற்காக ஆசைப்படுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் பணியாற்றியவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி பல இயக்குனர்களும் தற்போது அவர்களது வரலாற்றை வைத்து திரைப்படங்களாக எடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில்கூட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற திரைப்படத்தை மக்கள் முன்பு கொண்டுவந்தார்கள்.இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் மற்றும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்து மிகவும் அசத்தியிருப்பார் மேலும் இந்த திரைப்படம் வெளியான போது ஒரு சில பிழைகள் இருந்ததை மக்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.

பல இயக்குனர்களும் எதற்காக வரலாற்று திரைப்படத்தை எடுக்க ஆசை படுகிறார்கள் என்றால் பல சாதனைகளைப் படைத்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு இப்படித்தான் நடந்து வந்தது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இவர்கள் பலரும் தற்போது வரலாற்று திரைப்படங்களை எடுக்க ஆசைப்பட்டு வருகிறார்கள்.அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக கொஞ்சம் சொதப்பி விட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் மீண்டும் தற்பொழுது இதேபோல் ஒரு வரலாற்று திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போகிறாராம் .அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவரது முக பாவனைக்கு அரவிந்த்சாமி ஒத்துப் போவதால் இந்த திரைப்படத்திலும் இவர்தான் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.

mgr
mgr

என தகவல் கிடைத்துள்ளது.மேலும் இந்த திரைப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகி திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய சீக்கிரம் நடைபெற இருக்கிறது என இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.