தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை ரெஜினா. இவர் முதலில் “கண்ட நாள் முதல்” படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 16 வயது என சொல்லப்படுகிறது இருப்பினும் முதல் படத்தில் சூப்பராக நடித்து ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கினார்.
அதனைத் தொடர்ந்து அழுகிய அசுரா, பஞ்சமாருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா தந்திரம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் ஒரு கட்டத்தில் தெலுங்கு பக்கத்தில் பட வாய்ப்புகள் குவிந்தது தொடர்ந்து அங்கு ஹிட் படங்களை கொடுத்ததால் அங்கு இப்பொழுதும் அவருக்கு ஏகப்பட்ட மவுஸ்..
அதோடு மட்டுமல்லாமல் மலையாளத்திலும் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருகிறார் இப்படி திரையில் உலகில் ஜொலிக்கும் நடிகை ரெஜினாவை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் அது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார் அது குறித்து பார்ப்போம்..
நடிகை ரெஜினா 20 வயதாக இருக்கும் பொழுது ஒரு தயாரிப்பாளர் படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது பட வாய்ப்புக்காக சில அட்ஜஸ்மெண்டுகள் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அப்பொழுது நடிகை ரெஜினாவுக்கு தயாரிப்பாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது சரியாக புரியவில்லை என்பதால் தன்னுடைய மேனேஜரிடம் விசாரித்த போது தான் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்ததாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
பிறகு அந்த தயாரிப்பாளர் தொடர்ந்து போன் செய்தாராம் ஆனால் ரெஜினா சுதாகரித்துக் கொண்டு அந்த போனை எடுக்கவே இல்லையாம்.. பிறகும் அந்த தயாரிப்பாளர் ரெஜினாவுக்கு பல தொந்தரவுகள் கொடுத்துள்ளார். ஆனால் ரெஜினா அந்த தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் அப்படியே பேட்டியை முடித்து விட்டார்.