தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில இயக்குனர்கள் இதுவரை தோல்வியை சந்தித்ததே கிடையாது அந்த வகையில் இயக்குனர் அட்லீ இதுவரை ராஜா ராணி, பிகில், மெர்சல், தெறி போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். அதன்பின் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் கைகோர்த்து சிறப்பான படங்களை..
கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் முறையாக பாலிவுட் பக்கம் திசை திரும்பி டாப் நடிகர் ஷாருக்கானுடன் கைகோர்த்து ஜப்பான் படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.
இந்த படம் அடுத்த வருடம் ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது. ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப்பட பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, தீபிகா படுகோன், ராணா ரகுபதி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என தெரிய வருகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
ஜவான் திரைப்படம் ஹிந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் திரையில் வெளியிட்ட பிறகு ஓடிடி தளத்திற்கு வெளிவரும் என தெரிய வருகிறது அதற்கு இப்பொழுது பல நிறுவனங்கள் ஜவான் படத்தை வாங்க போட்டி போடுகின்றன அந்த வகையில் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ஜவான் படத்தை சுமார் 120 கோடி கொடுத்து வாங்க உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.