சின்னத்திரை விஜய் தொலைக்காட்சி மற்ற சேனல்களை காட்டிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களை கவர்ந்து வருக்கின்றன. அந்த வகையில் விஜய் சேனலில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலம். இது தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.
இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் கோலாகலமாக தொகுத்து வழங்கி முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பல பிரபலங்களும் தற்போது தமிழ் சினிமாவில் சிறப்பாக ஜொலித்து வருகின்றனர்.
அப்படி சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பல பிரபலங்களும் அதற்கு அடித்தளமாக அமையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசைப்படுகின்றன. இந்த நிலையில் கூடிய விரைவில் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான போட்டியாளர்களை பிக் பாஸ் குழு தேர்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இரண்டு மூன்று நபர்கள் விஜய் டிவி பிரபலம் கலந்து கொள்வார்கள்.
அப்படி தற்போது ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் ஆறாவது சீசனில் வீஜே ரக்சன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி போன்ற இருவரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. மேலும் இவர்களை தொடர்ந்து கஸ்தூரியின் கணவர் கார்த்தி மற்றும் டி இமானின் முன்னாள் மனைவி போன்றவர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்ற நிலையில் தற்போது புதிதாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
ஆம் பாலிமர் நியூஸ் சேனலில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் ரஞ்சித் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 40 நாட்கள் கலந்து கொள்ள இருக்கிறேன் என கூறியிருக்கிறார். அவர் கூறியதைப் பார்க்கும் பொழுது மறைமுகமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தான் குறிப்பிட்டிருப்பதாக தெரிய வருகிறது.
Welcome to the reality club #NewsReaderRanjith
Missing ur voice in News nowadays & looking forward to see ur fun & Action side in reality😉#PolimerRanjith pic.twitter.com/q6lT4aqNZR
— Imadh (@MSimath) July 30, 2022