கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புதுப்புது அர்தங்கள் என்ற படத்தின் மூலம் நடனக் இயக்குனராக அறிமுகமானவர் கலா மாஸ்டர். அதன்பின் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களுக்கு நடனம் கற்றுத் தந்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார் கலா மாஸ்டர்.
இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.அந்தவகையில் இப்பொழுதுகூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் தான் நடனம் கற்று கொடுத்தபோது நடந்த சிறப்பான மற்றும் பிரச்சனைகள் அடங்கிய சிலவற்றை கூறியுள்ளார். அதில் ஒன்றாக திரிஷா பற்றி கூறியுள்ளார். திரிஷா, ஷாம் நடிப்பில் உருவான லேசா லேசா திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன முமெண்ட் போடவேண்டும் ஆனால் முதலில் அந்த முமெண்ட் திரிஷாவுக்கு வரவில்லை.
ஆனால் கடைசியாக அவரும் ஆட வேண்டிய சூழல் வந்தது ஆனால் அது சரியாக திரிஷாவுக்கு வராமல் போனதால் கோபமடைந்த கலா மாஸ்டர் அவரை திட்டி உள்ளார். கோபமடைந்த திரிஷா உடனடியாக மேக்கப் ரூமுக்கு போய் விட்டார்.
எனது அப்பா லண்டனில் இருக்கிறார் நானும் அங்கேயே போகிறேன் என கூறிவிட்டாராம் உடனே கலா மாஸ்டர் திரிஷா அம்மாவுக்கு போன் செய்து உள்ளார் அதற்கு திரிஷா அம்மா எனது மகள் ரொம்ப சென்சிடிவ் நான் பேசுகிறேன் என கூறி திரும்ப அந்த பாடலுக்கு நடனமாட வைத்துள்ளார் ஒருவழியாக அவரும் அற்புதமாக நடனம் ஆடியதாக கூறினார் கலா மாஸ்டர்.