பேட்ட திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை உருவாக்கி உள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஆண்டே படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து இருந்தாலும் அப்போதைய சூழல் சரியில்லாத தால் படம் ரிலீசாகும் தேதி தள்ளிக்கொண்டே போனது
இப்பவும் அதே மாதிரியான சூழல் நீடித்து உள்ளதால் படம் திரையரங்கில் வெளி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் தற்போது ஓட்டிட்டு தளத்திற்கு விற்று உள்ளது தயாரிப்பு நிறுவனம். இந்த படம் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி OTT தளத்தில் வெளியாக உள்ளது.
மேலும் இந்த படம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதால் படத்திற்கான வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் மற்றும் ஜோஜீ ஜார்ஜ் போன்ற பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.
மேலும் ஹோலிவுட் பிரபல நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் இதில் நடித்து உள்ளார். ஜேம்ஸ் காஸ்மோ இதுவரை பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் பிரேவ் ஹார்ட், ட்ராய், கேம் ஆப் த்ரோன்ஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜகமே தந்திரம் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜேம்ஸ் காஸ்மோ கூறுகையில் நான் இந்தியாவில் ஒரு சிறப்பான படத்திற்காக நேரத்தை செலவழித்து உள்ளது எனக்கு பெருமை தான். மேலும் இந்தியா எவ்வளவு ஒரு அற்புதமான மாநாடு என்றே தெரியவருகிறது மேலும் இந்தியாவில் உள்ளவர்கள் நம்பமுடியாத திறமையுடன் உள்ளதாகவும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.