தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் காமெடி நடிகராக இருந்து எல்லா திறமைகளையும் கொண்டு வலம் வருபவர் தான் டிபி கஜேந்திரன் இவரிடம் உதவியாளராக இருந்து பணியாற்றி வந்தவர் நிமல்.
இவர் டிபி கஜேந்திரன் ஆசீர்வாதத்தால் தற்பொழுது கால் டாக்ஸி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் ஒரு பேட்டியில் நிர்மல் அளித்தது நான் சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது அதனால் நான் சினிமாவில் நடிப்பதற்கு சென்னை வந்தேன் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் டிபி கஜேந்திரன் சாரை தவிர எனக்கு வேற எந்த ஒரு நபரும் தெரியாது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நான் டிபி கஜேந்திரன் சாரை அணுகிய போது அவர் என்னை முதலில் சினிமாவை பற்றியே தெரிந்து கொள் பின்பு சினிமாவில் நடிக்கலாம் என கூறி என்னிடம் மொத்த தயாரிப்பு பணிகளையும்கொடுத்தார் .
இதனையடுத்து எனது ஆசைப்படி நான் வில்லனாக கால்டாக்ஸி என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மேலும் ஒருசில திரைப்படத்தில் நடித்து வருகிறேன் என்றும கூறியிருந்தார்நிமல் .