நடிகர் அஜித் அண்மை காலமாக ஒரு இயக்குனருடன் பணியாற்றினால் தொடர்ந்து அந்த இயக்குனருடன் இரண்டு அல்லது மூன்று படங்களை பண்ணுவது வழக்கம். அதுபோல்தான் சிறுத்தை சிவாவுடன் இணைந்து வேதாளம் விசுவாசம் விவேகம் போன்ற மூன்று படங்களை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து எச் வினோத்துடன் கூட்டணி அமைத்து நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு ஆகிய மூன்று படங்களை கொடுத்துள்ளார்
இதில் துணிவு படம் அண்மையில் தான் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. மேலும் எதிர்பாராத வசூலையும் அள்ளி வருகிறது இதனால் அடுத்த அஜித்தின் 62 ஆவது படத்தின் எதிர்பார்ப்பு தான் அதிகரித்துள்ளது. ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தற்போது அஜித் விக்னேஷ் சிவனுடன் இணைய போவதில்லை வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சு தான் தற்போது இணையதள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஏ கே 63 திரைப்படத்தை யார் இயக்க உள்ளார் என்ற பேச்சும் அடிபட்டு வருகின்றன. அதன்படி இயக்குனர் ஷங்கர் ரஜினி கமல் விஜய் போன்ற பல டாப் நடிகர்களுடன் கைகோர்த்துள்ளார் ஆனால் அஜித்துடன் மட்டும் அவர் இதுவரை இணையவில்லை.
இவர்கள் கூட்டணியை ரசிகர்கள் கூட பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். இப்படி இருக்க இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே அஜித்தை சந்தித்து ஒரு கதையையும் சொல்லி இருக்கின்றாராம். அதன்படி ஏகே 63 திரைப்படத்தை சங்கர் இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து இயக்கி வரும் ஆர் சி 15 மற்றும் இந்தியன் டு ஆகிய இரு படங்களும் முடியும் தருவாயில் இருக்கிறதால் அடுத்து அஜித்துடன் இணைய அதிகளவு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சங்கருக்கு போட்டியாக புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் அஜித்திற்கு ஒரு கதையை கூறியுள்ளார். அதனால் அஜித் இந்த இரு இயக்குனர்களில் யாரை முதலில் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.