தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் இவர் அண்மைக்காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து நல்ல படங்களை கொடுத்து அசதி வருகிறார் அந்த வகையில் இப்பொழுது கூட ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கேற்றார் போல அண்மையில் கூட பேங்க் போன்ற ஒரு பிரம்மாண்ட செட் போட்டு படத்தை எடுத்தது அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பெரிதாக வைரலாகின. இந்த படம் நிச்சயம் அஜித்தைக்கு ஒரு பெஸ்ட் படமாக இருக்கும் என தெரிய வருகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத்துவம் இந்த படத்தில் இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 வது திரைப்படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் திரை உலகில் கால் தடம் வைத்து முப்பது வருடங்கள் ஆகியுள்ளது. அதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஜித் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சில பதிவுகளை போட்டு அசத்துகின்றனர்.
அந்த வகையில் மங்காத்தா படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் வெங்கட் பிரபு அஜித் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மங்காத்தா 2 படத்தை எப்பொழுது எடுப்பீர்கள் என மீண்டும் கேட்டு வருகின்றனர். அஜித்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டதால் தற்பொழுது வெங்கட் பிரபுவை இந்த கேள்வியை கேட்டு அவரை டார்ச்சர் செய்து வருகிறார்களாம் ஆனால் அவரும் ஏதாவது பதில் அளித்தால் தன்னை விட மாட்டார்கள் என்பது தெரிந்து வாயை திறக்காமல் இருந்து வருகிறார்.
Happy #30YearsOfAJITHISM #30yearsofThala #ak #thala thanks for making me a small part in ur journey na!! Love u!! pic.twitter.com/mZ2KDewb1P
— venkat prabhu (@vp_offl) August 3, 2022