இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஒரு வரலாற்று திரைப்படம் தான் பொன்னின் செல்வன் இந்த திரைப்படம் கல்கியின் நாவலை கல்வி உருவாக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து அவர் அனைவரையும் பாராட்டியுள்ளார் அது மட்டுமல்லாமல் பொன்னின் செல்வன் திரைப்படம் வசிகரிக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறந்த வரலாற்று திரைப்படம் வெளியாகி உள்ளது எனவும் மணிரத்தினம் படத்தை உருவாக்குவதில் ஒரு கிங்க் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் சங்கர்.
மேலும் இந்த படகுழுவில் நடித்த நடிகர்களுக்கும் இந்த படத்திற்காக உழைத்த துணை இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என படக் குழுவினர் அனைவரையும் வாழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் முடிவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக ஒரு பக்கம் தகவல் வெளியாகியுள்ளது. இப்படியே விட்டால் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் ஒரு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து பொன்னின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் முதல் பாகம் கொடுத்த ஆர்வம் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்களை காத்திருக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.அந்த அளவிற்கு படத்தை தத்துரூபமாக இயக்கியுள்ளார் மணிரத்தினம் அவர்கள்.