விடுதலை படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட பிரபல இயக்குனர்.!

viduthalai
viduthalai

கோலிவுட்டில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் சூரி.இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா காமெடியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த படத்திற்குப் பிறகு இவர் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பைப் பற்றி வருகிறார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி பெற்றுள்ள இவர் தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இளையராஜா அவர்களின் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வழியாகி உள்ளது.

viduthalai 2
viduthalai 2

அது வேறு யாருமில்லை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தான் இவர் தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் வெற்றிமாறன் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பது போல் இருக்கும் புகைப்படம் தான் தற்பொழுது வெளிவந்துள்ளது. இவ்வாறு வெற்றிமாறனுக்கும் கௌதம் கார்த்திக் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த படத்தின் மூலம் பழைய கௌதம் மேனனை பார்க்கலாம் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் நேற்று வெற்றிமாறன் அவர்களின் தரப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியானது அதில் அவர் காடுகள் பற்றி நாம் ஒரு நினைத்துக் கொண்டு இருப்போம் ஆனால் அது ஒன்று தரும் என வசனம் கூறிவிட்டு இந்த திரைப்படத்தின் கதை நாயகன் சூரியாக இருந்தாலும் கதாநாயகன் விஜய் சேதுபதி தான் என கூறியுள்ளார்.