நீ எல்லாம் சாப்பிட தான் லாயக்கு.. சுட்டு போட்டாலும் உனக்கு நடிப்பு வராது சூர்யாவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்..!

surya
surya

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன இப்பொழுது கூட இயக்குனர் பாலா உடன் கைகோர்த்து வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா உடன் தனது 42வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக சூர்யா நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். சினிமா உலகில் இப்பொழுது எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சாதாரணமாக நடிக்கும் சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உள்ளார் அப்படி தனது முதல் படத்திற்காகவே பல அவமானங்களையும், அசிங்கங்களையும் அவர் சந்தித்துள்ளார்.

அப்படி தனது முதல் படமான நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜய் உடன் சூர்யா நடித்தார். முதல் படம் பெரியளவு எதிர்பார்ப்பு இல்லாமல் நடிக்க ஓகே சொல்லி இருந்தார் சூர்யா இந்த படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியிருந்தார் அப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சியில் சூர்யாவால் சரியாக நடிக்க முடியாமல் இருந்தாராம்.

ஏகப்பட்ட டேக்குகள் சென்றதாம் உடனே இயக்குனர் படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுத்து அனைவரையும் சாப்பிட சொல்லுமாறு கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து சாப்பிட சென்ற சூர்யா அங்கே பிரியாணி பரிமாற்றப்பட்டு இருந்துள்ளது நன்றாக சாப்பிட்ட அவர் இயக்குனரிடம் சென்று சார் பிரியாணி நல்லா இருக்கு போய் சாப்பிடுமாறு கூறியிருக்கிறார்.

அதில் கடுப்பான வசந்த் நீ எல்லாம் பிரியாணி சாப்பிட தான் லாயக்கு உனக்கு நடிப்பெல்லாம் வராது என கூறியுள்ளார். படப்பிடிப்பில் சொல்ல சுற்றி இருந்தவர்கள் எல்லாம் சூர்யாவை ஒரு மாதிரி பார்க்க அவருக்கு ரொம்ப அவமானமாக போய்விட்டதாம் அதனால் தீவிரமாக உழைத்து அந்த படத்தை முடித்துக் கொடுத்தார். அதன் பிறகு சூர்யா ஒவ்வொரு படத்திற்காகவும் கடினமாக உழைத்து வந்தாராம்.