தமிழ் சினிமா உலகில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் சினிமாவில் என்ன பண்ணுகிறார்கள் அவர்களது பர்சனல் விஷயத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்பதை அனைத்தையும் பயப்படாமல் பேட்டிகளில் சொல்லி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
அந்த வகையில் இப்பொழுது எஸ்டிஆர் என்கின்ற சிலம்பரசனை பற்றி பேசியுள்ளார் அதில் அவர் கூறி உள்ளது நடிகர் சிம்பு சோனியா அகர்வால் வடிவேலு மற்றும் பலர் டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்திய திரைப்படம் கோவில் இந்த திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் அப்பொழுது படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டார் பயில்வான் ரங்கநாதன் அதில் அவர் சொன்னது சிம்பு தனது படங்களின் ஷூட்டிங்கிற்கு சற்று தாமதமாக வருவது உண்டு.
அது போல ஹரி இயக்கத்தில் வெளியான கோவில் படத்தின் சூட்டிங் இருக்கும் ரொம்ப தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் ஆரம்பத்தில் கோபப்பட்டு இருந்தாலும் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் ஹரி ஒருநாள் முக்கிய காட்சிகள் எடுக்க வேண்டிய தருணம் அது அப்போது லேட்டாக வந்ததால் கோபமடைந்த ஹரி.
கட்டுப்படுத்த முடியாமல் அசிஸ்டெண்ட் திட்டுவது போல மறைமுகமாக சிம்புவை காட்டமாக பேசி உள்ளார் அவர் சொன்னது தன்னைத்தான் என கூறினார். வாங்குற காசுக்கு கரெக்டா நேரத்திற்கு வரமாட்டியா என கோபமாக பேசியுள்ளார் இயக்குனர் தன்னை தான் பேசுகிறார் என்பதை சிம்புவும் உணர்ந்து கொண்டார் அதன் பிறகு இருவரும் எந்த ஒரு படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லையாம்.