ராஜமௌலி பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகத்தை இயக்கி அதைத் தொடர்ந்து சிறு இடைவேளைக்குப் பிறகு ராம் சரண் ஜூனியர் என்டிஆர் வைத்து அவர் இயக்கிய திரைப்படம் தான் RRR. இந்த திரைப்படத்தையும் மிக பிரமாண்ட பொருட்செலவில் ராஜமௌலி எடுத்திருந்தார்.
இந்த படத்திலும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஆக்ஷன் மற்றும் படத்தின் கதை களமும் வித்தியாசமாக கற்பனைக்கு எட்டாத சில சூப்பரான விஷயங்களை வைத்திருந்தார். படம் மூன்று மணி நேரமும் பெரிதாக இருந்தாலும் படம் நகர்வதே விருவிருப்பாக இருப்பதால் 3 மணி நேரம் போவதே தெரியவில்லை அந்த அளவிற்கு பரபரப்பாகவும் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் இருந்ததாக கூறப்படுகிறது.
இப்பொழுது ரசிகர்களும் மக்களும் படத்தை பார்த்துவிட்டு நல்ல கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர் அதேசமயம் மறுபக்கம் வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது. ஆந்திராவில் மட்டுமே 100 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் 12 கோடியை வசூல் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன உலக அளவில் RRR திரைப்படம் முதல் நாள் மட்டும் கிட்டதட்ட 200 கோடி வசூல் செய்து இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய சினிமா உலகில் உச்சத்தைத் தொட்ட பல சினிமா பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் படத்தை பார்த்து நல்ல கருத்துக்களைக் கூறிவருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்தும் இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு RRR படத்தில் பட குழு மற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனரை புகழ்ந்து பேசி சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் அவர் கூறுவது :
அட்டகாசமான அசத்தலான வலுவானது இந்த கர்ஜனை எப்பொழுதும் எதிரொலிக்கும் இப்படி ஒரு ஒப்பிட்டு பார்க்க முடியாத அற்புதமான உணர்வைத் தந்த ஒட்டு மொத்த டீமுக்கும் நன்றி ராம்சரனின் அசத்தலான நடிப்பு திரையை விட்டு கண்ணை நகர விடவில்லை அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார். மேலும் பேசிய ஷங்கர் உங்களின் கற்பனையை யாராலும் அடிச்சிக்கவே முடியாது பாராட்டுகள் மகாராஜாமௌலி என குறிப்பிட்டார்.