பிரமாண்ட இயக்குனர்க்கு போட்டியாக தனது மகளையும் சினிமாவில் இறக்கிவிட்ட பிரபல இயக்குனர்..!

shankar

முன்பெல்லாம் அரசியலில் தான் வாரிசு அரசியல் நடந்து வந்தன ஆனால் தற்போது சினிமாவில் கூட தங்களுடைய வாரிசுகளை பிரபல நடிகர்கள் நடிக்க வைத்து அழகு பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களின் வாரிசுகள் தற்போது சினிமாவில் படிப்படியாக நுழைந்து வருகிறார்கள்

அந்த வகையில் நடிகர் கார்த்திக் தன்னுடைய மகன் கௌதம் கார்த்திக்கை சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வைத்துள்ளார் நடிகர் விக்ரம் தன்னுடைய மகன் துருவ் விக்ரமை ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இதுபோன்று பல்வேறு நடிகர்களும் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பல்வேறு வாரிசு நடிகைகளும் சினிமாவில் நுழைந்து வருகிறார்கள்.  அந்த வகையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் மற்றும்  மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் போன்றவர்களும் வாரிசு நடிகர்கள் தான்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தன்னுடைய மகள் அதிதியை கோலிவுட்டில் நாயகியாக அறிமுகப்படுத்தி உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகின அந்த வகையில் இவர் நடிக்க போகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே பிரபல இயக்குனர் தன்னுடைய மகளையும் சினிமாவில் கலமிறக்க உள்ளார்.  அவர் வேறு யாரும் கிடையாது ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி ஆவர்.  இவர் தரமணி படம் மூலமாக பிரபலமான நாயகன் வசந்த் ரவி நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

saraswathi-1
saraswathi-1

இவர் இதற்கு முன்பாகவே சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார் இந்நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.