அஜித் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் அவரை மட்டும் எப்பொழுதுமே கீழே இறங்க விடாமல் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கின்றனர். அதற்கு ஏற்றது போல அஜித்தும் அண்மை காலமாக தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.
இப்பொழுது கூட தனது 61வது திரைப்படமான துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்க அஜித் இந்த படத்தை தொடர்ந்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் அஜித் பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது .. நடிகர் அஜித்குமார் யாருடனாவது நன்கு பழகி விட்டாள் அவருக்கு ஏதாவது உதவி செய்வது அல்லது அவருக்குடன் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி நடிகரும், இயக்குனருமான வெங்கட் பிரபுவுடன் இணைந்து முதலில் ஜி படத்தில் நடித்தார்.
அப்பொழுது இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட பின் இருவரும் இணைந்து மங்காத்தா திரைப்படத்தில் இணைந்தனர் இந்த படம் அஜித்திற்கு 50-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் கதையை முதலில் இயக்குனர் மங்காத்தா என்ற பெயரில் சொல்லி உள்ளார் ஆனால் அஜித் கதையை கேட்டதும்..
இந்த கதையை அந்த ஹாலிவுட் படத்திலிருந்து உருவிய தானே என சிரித்துக் கொண்டே கூறியுள்ளார் இதனை கேட்ட வெங்கட் பிரபு அதிர்ந்து விட்டாராம் எனினும் மங்காத்தா திரைப்படத்தில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டார் படம் வெளிவந்து சக்கப் கோடு போட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இந்த திரைப்படத்தின் மூலம் தான் முதலில் டீசர் ஒன்று உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.