சரியான நேரம் பார்த்து சூப்பர் ஸ்டாருக்கு “பேய் கதை” சொன்ன பிரபல இயக்குனர்.. தலைவர் ஓகே சொன்ன 500 கோடி வசூல் கன்ஃபார்ம்.!

rajini
rajini

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக பார்க்கபடுவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்தாலும் சமீபகாலமாக இவர் நடித்த ஒன்னு, ரெண்டு  திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றன. இதிலிருந்து மீண்டு வர நடிகர் ரஜினி வெற்றி இயக்குனர் நெல்சன் திலீப் குமார் உடன் கூட்டணி..

அமைத்து தனது 169 வது திரைப்படமான “ஜெயிலர்” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. அதற்கு ஏற்றார் போல படத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாள டாப் ஹீரோ  மோகன்லால், கன்னட டாப் ஹீரோ  சிவராஜ் குமார்..

விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன்,  தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மகள்  ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார்.

இதற்காக அவர் 15 நாள் கால்ஷீட் கொடுத்து உள்ளார் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில்  ரஜினி பற்றி பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..  ரஜினியை சந்தித்து பேய் கதை ஒன்றை சொல்லி இருக்கிறேன்..

அதுமட்டுமின்றி ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் காமெடி கலந்த ஒரு கதையையும் சொல்லி உள்ளாராம்.. இதில் எந்த கதை ரஜினிக்கு பிடித்திருக்கிறதோ அதை வைத்து படம் எடுப்பேன் என கூறியிருக்கிறார். மேலும் ரஜினியுடன் இது பற்றிய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறேன் அவரும் அமைதியாக இருந்து வருகிறார்.