நயன்தாரா இருந்த கேரவனுக்குள் திடீரென புகுந்த பிரபல இயக்குனர் – கடைசியில் நடந்தது என்ன தெரியுமா.?

nayanthara
nayanthara

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டுள்ளார்.

மேலும் இவர் ஒரு படத்திற்காக தற்போது 10 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இப்பொழுது கூட நயன்தாரா கையில் ஜவான், கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்து ஒரு தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

படபிடிப்பு தளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒவ்வொரு காட்சி முடிந்ததும் ரெஸ்ட் எடுக்க போய்விடுவார் அப்படி படபிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை முடித்துவிட்டு சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க கேரவனுக்கு சென்றுள்ளார். கேரக்டனுக்கு வெளியே பவுன்சர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் மேலும் நயன்தாரா அனுமதியில்லாமல் யாரையும் உள்ளே விட மாட்டார்கள்.

ஆனால் ஒரு நாள் பவுன்சர்கள் சற்று தொலைவில் இருந்ததால் சரியான நேரம் பார்த்து ஒரு பிரபல இயக்குனர் ஒருவர் நயன்தாரா கேரவனுக்குள்ளே நுழைந்து விட்டாராம் உடனே சுதாரித்துக் கொண்ட நயன்தாரா அந்த இயக்குனரை உட்கார வைத்துவிட்டு மற்றொரு கதவால் வெளியே வந்தாராம் வெளியே வந்தவுடன் அந்த பவுன்சர்களை கூப்பிட்டு கண்ணா பின்னான்னு திட்டி என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி அவர் உள்ளே வந்தார்..

எனக்கு நீங்கள் பாதுகாப்பாக இல்லாமல் இங்கே வந்து இருக்கிறீர்கள் என கேள்விகளை கேட்டு தொலைத்தெடுத்தார் பின் அவரை வெளியே அனுப்புங்கள் என கூறியுள்ளார் பின் பவுன்சர்கள் நயன்தாராவின் பேச்சைக் கேட்டு அந்த இயக்குனரை வெளியே அனுப்பி உள்ளனர் பிறகு இதுபோன்று மற்றொரு தடவை நடக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள் என பவுன்சர்களை எச்சரித்து கதவை சாத்தினாராம்.