தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது காமெடி சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருக்கிறார். முதல் பாகம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உயிருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் போன்றவை வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த நிலையில் தற்போது விடுதலை திரைப்படம் குறித்தும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் குறித்தும் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. விடுதலை திரைப்படம் போலீசுக்கும், மலைவாழ் மக்களுக்கும் நடக்கும்..
பிரச்சனையை படமாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது இதில் போலீஸ் அராஜகத்தை தோலிருத்து காட்டும் என தெரிய வருகிறது. இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் குரு மூர்த்தியாகவும், டாணாகாரன் பட இயக்குனருமான தமிழ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் குறித்தும், விடுதலை படம் குறித்தும் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது அடிக்கடி கூறுவார் ரொம்ப கவனமாக கையாள வேண்டிய அரசியல் இது என்று ஒரு இன விடுதலை அரசியலை குறித்து பேசும்பொழுது கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.. இந்த படத்தை பார்த்துவிட்டு இதுவரை இயக்குனர் வெற்றிமாறனை ஆதரித்தவர்கள் கூட அவரை எதிர்காலம்..
இதுவரை வெற்றிமாறனை எதிர்த்தவர்கள் கூட அவரை ஆதரிக்கலாம் அப்படி ஒரு வாய்ப்பு இந்த படத்திற்கு இருக்கிறது வெற்றிமாறன் இதைத் தான் எதிர்பார்க்கிறார் என கூறியுள்ளார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது விஷயத்தை கேள்வி ஏற்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் இருக்கின்றனராம்..