“மன்மதன்” என்ற தலைப்பில் அஜித்துக்கு ஒரு கதையை ரெடி செய்த பிரபல இயக்குனர் – கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..!

ajith
ajith

சினிமா உலகில் இருக்கும் இளம் இயக்குனர்கள் முதற்கொண்டு முன்னணி இயக்குனர்கள் வரை பலரும் டாப் நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்களை வைத்து படம் எடுக்கவே ஆசைப்பட்டு வருகின்றன. ஏனென்றால் அவர்களின் படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று அதிகளவு வசூலை அள்ளும்..

அதன் மூலம் அந்த இயக்குனர்களும் சினிமாவில் கொடி கட்டி பறப்பார்கள் என்பதுதான் உண்மை. இந்த நிலையில் என்னமா கண்ணு, சார்லி சாப்ளின் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். இவர் முதலில் இயக்கிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் இனி சினிமாவே வேண்டாம் என எண்ணி சொந்த ஊருக்கே சென்றுவிடலாம்..

என நினைத்த போது திடீரென எதிர்பார்க்காத ஒரு தயாரிப்பாளர் இடம் இருந்து போன் வந்தது. அந்த தயாரிப்பாளரோ சத்யராஜ் பிரபு இவர்களுக்கு செட் ஆகுற மாதிரி ஒரு கதையை கூறுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் சக்தி சிதம்பரத்திடம் இருந்தது அஜித்திற்காக எழுதிய மன்மத லீலை என்னும் கதை தானாம் இருந்தாலும்..

அந்த கதையை தயாரிப்பாளர் இடம் கூற தயாரிப்பாளருக்கு இந்த கதை ரொம்ப பிடித்துப் போகவே அஜித் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து என்னம்மா கண்ணு என்ற பெயரில் இந்த படம் வெளிவந்தது. இந்த படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார் மற்றும் வைகை புயல் வடிவேலு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சக்தி சிதம்பரம் மன்மத லீலை என்னும் பெயரில் இந்த கதையை அஜித்திடம் கூறியிருந்தால் அஜித் நடித்திருப்பாரா என்பது ஒரு சந்தேகம் தான். அதனால் கதையை வீணாக்காமல் இயக்குனர் சக்தி சிதம்பரம் சத்யராஜை வைத்து படத்தை இயக்கியது நல்லது என கூறப்படுகிறது.