நடிகர் சூர்யா தனது சினிமா பயணத்தில் பல்வேறு விதமான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த திரைப்படங்களில் தனது முழு திறமையை வெளிக்காட்டி அந்த படத்தை வெற்றி படமாக மாற்றி வருகிறார். அப்படி சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று, எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் வெற்றியை ருசித்த..
நிலையில் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். முதலாவதாக பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து வெற்றிமாறனுடன் வாடிவாசல் சிறுத்தை சிவா உடன் ஒரு படம் சுதா கோங்காரா உடனும் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்.
இதனால் சூர்யாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா சூரறை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதும் வாங்க உள்ளார். நடிகர் சூர்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் தான் அழுத சம்பவத்தையும் பகிர்ந்தும் கொண்டு உள்ளார்.
கார்மெண்ட்ஸ் தொழிலதிபராக ஆசைப்பட்டு அந்த கனவு முயற்சியில் இருந்த என்னை கொண்டு வந்து நேருக்கு நேர் படத்தில் நடிக்க வச்சாங்க கல்கத்தாவில் ஷூட்டிங் பொழுது எனக்கு சுத்தமா நடிப்பு வரலை என்று மொத்த யூனிட்டே கடுப்பில் இருந்தார்கள். அப்பொழுது லஞ்ச் பிரேக் சமயத்தில் கல்கத்தா பிரியாணி நல்லா இருக்கு சார் என்று சூர்யா அந்த படத்தின் இயக்குனர் வசந்த் சார்கிட்ட சொல்லி உள்ளார்.
அதற்காக அவர் அப்படியா நல்லா சாப்பிடு ராசா என்று கிண்டல் செய்து அசிங்கப்படுத்தி பேசினார். அந்த நேரம் அப்படியே கூனிக்குறுகிப் போனேன் என்றும் அதனால் அழுதழுது தலையணை நனைந்த நாள் அன்றுதான் அதை இப்பொழுது நினைத்தால் கூட அழுகை தான் வருகிறது என கூறி உள்ளார்.