கிரிக்கெட் உலகில் மிக சிறப்பாக வலம் வந்தவர் கேரள கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் சில ஆண்டுகளுக்கு முன் சில சர்ச்சையான விஷயங்களில் சிக்கி சின்னாபின்னமான ஆளும் அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் தற்போது கிரிக்கெட் மற்றும் சினிமா இரண்டிலும் அதிரடியாக இறங்கி தனது திறமையை வெளிகாட்ட ரெடியாக இருக்கிறார்.
அந்த வகையில் சினிமாவில் இதுவரை 2 திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார் மூன்றாவதாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்த திரைப்படத்தை ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் அவரது பெயர் பட்டா என வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவில் சிறப்பாக ஜொலிக்கும் முன்னணி நடிகையான சன்னி லியோன் நடிக்க களம் இறங்கி உள்ளார்.
நடிப்பில் சும்மாவே மிரட்டும் ஸ்ரீசாந்த் தற்போது சன்னி லியோன் உடன் சேர்ந்து நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் கொண்டாட தற்பொழுது ரெடியாக இருக்கின்றனர்.
சன்னி லியோன் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதால் ரொமான்டிக், கவர்ச்சி சீன்கள் அதிகம் இருக்கும் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படத்தை பார்க்க தற்போது இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.