சினிமா உலகில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் தனது அழகு திறமையை சினிமாவுலகில் சரியாக பயன்படுத்தி ஹீரோயின் அவதாரம் எடுத்தார் அண்ரியா. முதலில் சரத்குமார் நடிப்பில் உருவான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின் தமிழ் சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் இவர் இதுவரை நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றுள்ளன குறிப்பாக வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன், வலியவன், மங்காத்தா போன்ற படங்கள் ஆகும் இப்பொழுதுகூட மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து பின்னணி பாடகராகவும் இசையமைப்பதுமாக பணியாற்றி வருகிறார் அதுவும் அவருக்கு நல்லதொரு வளர்ச்சியை கொடுத்து வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் குறித்து பேசியுள்ளார்.
புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா பாடலை தனது நீண்டகால நண்பரான இசையமைப்பாளர் ஸ்ரீதேவி பிரசாத் இந்த பாடலை பாடச்சொல்லி கேட்டுக் கொண்டார். நானும் சில வரிகளை பாடினேன் ஆனால் அதில் எனக்கு திருப்தியில்லை ஒரு கட்டத்தில் தேவி ஸ்ரீபிரசாத்..
அந்தப் பாடலைப் பாடுமாறு உற்சாகப்படுத்தி என்னை கட்டாயப் படுத்தினார் அந்த காரணத்தினால் தான் நான் இந்த பாடலை பாடினேன். படம் வெளியாவதற்கு முன்பாகவே ஓ சொல்றியா மாமா பாடல் ஹிட்டாகி விட்டது அதற்கு முழுக்க முழுக்க காரணம் தேவிஸ்ரீ பிரசாத் தான் என கூறினார்.